Search This Blog

Thursday, 6 June 2013

தள்ளிப் போகும் மரியான்

தள்ளிப் போகும் மரியான்

img1130606006_1_1

                       தனுஷ் நடித்திருக்கும் மரியான் படத்தின் வெளியீடு தள்ளிப் போகிறது.
ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் பரத்பாலா இயக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் படம் மரியான். தனுஷ், பார்வதி நடித்துள்ளனர். படத்தின் பாடல்கள் வெளியான நிலையில் மே 31 படத்தை வெளியிடுவதாக இருந்தனர். குறைந்தபட்சம் ஜுனிலாவது படத்தை வெளியிடுவது திட்டம்.
ஆனால் தனுஷின் இந்திப் படம் காரணமாக மரியானின் ரிலீஸ் தள்ளிப் போகிறது.
தனுஷின் முதல் இந்திப்படம் ராஞ்சனா ஜுன் 21 வெளியாகிறது என பல மாதங்கள் முன்பே அறிவித்திருந்தனர். ராஞ்சனா அம்பிகாபதி என்ற பெயரில் அதே ஜுன் 21 அன்று தமிழில் வெளியாகிறது. அதன் காரணமாக மரியானின் வெளியீட்டை தள்ளி வைத்துள்ளனர்.
ஜுலை மாதமே மரியான் வெளியாகும் என தெரிகிறது.

No comments:

Post a Comment