Search This Blog

Thursday, 6 June 2013

சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்

சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்

பத்மப்‌ரியா திறமையான நடிகை. ஆனால் சினிமாவில் யார் திறமையை பார்க்கிறார்கள். அவர்கள் பார்ப்பதில் அதிர்ஷ்டம் உள்பட பல விஷயங்கள் பத்மப்‌ரியாவிடம் மிஸ்ஸிங்.
ஹோம்லி வேடங்களில் நடித்ததால் அதற்குதான் அவர் லாயக்கு என்று முடிவு கட்டினார்கள். இதனை லேட்டாக பு‌ரிந்து கொண்டவர் சொந்த காசில் கிளாமராக போட்டோசெஷன் ஒன்றை நடத்தி அனைவ‌ரின் பார்வைக்கும் அனுப்பினார். பயன் பூ‌ஜ்‌ஜியம்.
கடைசியாக அவர் தமிழில் நடித்தது தங்கமீன்கள். வெளிவந்த படம் பொக்கிஷம். இதே நிலைமைதான் மற்ற மொழிகளிலும். இதன் காரணமாக படிப்புக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார். கேட்கிறவர்களுக்கு பதில் சொல்ல வேண்டுமே.
நியூயார்க்கில் உள்ள பல்கலைகழகத்தில் காலர்ஷிப்போடு ஒரு கோர்ஸ் பண்றேன், இதெல்லாம் யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு. சினிமா எல்லாம் சும்மா. படிப்பு இருக்கிறதே படிப்பு… அதுதான் எனக்கு எல்லாம் என தூரமாக செல்கிறவர்களையும் கூப்பிட்டு நிறுத்தி கிளாஸ் எடுக்கிறார்.
ம்… ஒரு படம் கிடைச்சா எல்லாம் ச‌ரியாயிடும்.

No comments:

Post a Comment