Search This Blog

Monday, 10 June 2013

தேச சேவை – தொடங்கினார் அர்ஜுன்

தேச சேவை – தொடங்கினார் அர்ஜுன்


img1130610032_1_1                சிந்தனையில் அப்துல்கலாமும், உடம்பில் சிக்ஸ்பேக்குமாக ஜெய்ஹிந்த் 2 படப்பிடிப்பை தொடங்கினார் அர்ஜுன்.
மார்க்கெட் டல் அடித்த நேரங்களில் அர்ஜுன் பல படங்கள் இயக்கி நடித்திருக்கிறார். அனைத்தும் அநீதியை அழித்து நீதியை நிலைநாட்டும் படங்கள். அதில் ஒன்று தேசத்தை காப்பாற்றும் ஜெய்ஹிந்த். ரஞ்சிதா, கவுண்டமணி, சந்திரசேகர், சாருஹாசன் நடித்த இந்தப் படம் மிகப்பெ‌ரிய வெற்றியை பெற்றது.
இதன் இரண்டாம் பாகத்தை தமிழ், தெலுங்கு, இந்தி என மும்மொழிகளில் எழுதி, இயக்கி, நடிப்பதாக அர்ஜுன் தெ‌ரிவித்திருந்தார். தயா‌ரிப்பும் அவரே. சொன்னபடி நேற்று ஜெய்ஹிந்த் 2 படத்தை ஆரம்பித்தார். இந்தப் படத்தை அப்துல்கலாமுக்கு அர்ப்பணிப்பதாக அர்ஜுன் ஏற்கனவே கூறியிருந்தார்.
இதில் மூன்று பேர் மூன்று காதலில் அர்ஜுனுடன் நடித்த சர்வீன் ஜோடியாக நடிக்கிறார்.

No comments:

Post a Comment