பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் தந்தை காலமானார்
முன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான பிரியங்கா சோப்ராவின் தந்தை டாக்டர் அசோக் சோப்ரா காலமானார். கேன்சர் நோயால் அவதிப்பட்டு வந்த அவர் இன்று(ஜூன் 10தேதி) மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.பாலிவுட்டின் முன்னணி நடிகை பிரியங்கா சோப்ரா. இவரது தந்தை டாக்டர் அசோக் சோப்ரா. இந்திய ராணுவத்தில் டாக்டராக பணிபுரிந்து கடந்த 1997ம் ஆண்டு ஓய்வு பெற்றவர்.
அசோக் சோப்ரா கேன்சர் நோயால் அவதிப்பட்டு வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் நோயின் தாக்கம் தீவிரமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று(ஜூன் 10தேதி) நண்பகல் 12.30 மணியளவில் அவர் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தனது தந்தையின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் கடந்த சில நாட்களாக ஷூட்டிங்கை எல்லாம் ரத்து செய்துவிட்டு தனது தந்தையின் அருகிலேயே இருந்து கவனித்து வந்தார் பிரியங்கா சோப்ரா. சமீபத்தில் கூட தனது தந்தையின் ஆயுள் நீடிக்க தனது இல்லத்தில் மிருத்யுஞ்ஜய பூஜை செய்தார். ஆனாலும் அவரது பூஜை பலன் அளிக்கவில்லை. தனது தந்தையின் மரணம் பிரியங்காவை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
No comments:
Post a Comment