கார் மோதி ஒருவர் பலி: சல்மான்கான் மீதான வழக்கு விசாரணை 24-ந்தேதிக்கு தள்ளிவைப்பு
சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்த நபரின் மீது காரை ஏற்றிக் கொன்றதாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் மீது மும்பை கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
சல்மான்கான் ஆஜராகாததால் பல முறை தள்ளிவைக்கப்பட்ட இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
கோர்ட்டில் ஊழியர் பற்றாக்குறை நிலவுவதால் மறு விசாரணையை ஜூன் 24ம் தேதிக்கு தள்ளி வைப்பதாக நீதிபதி அறிவித்தார்.
2002ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி மும்பை பந்த்ரா பகுதியில் சல்மான் கான் ஓட்டி வந்த சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்ததால் ஒருவர் பலியானார். 4 பேர் காயமடைந்தனர்.
இது தொடர்பாக அவர் மீது குற்றவியல் சட்டப்பிரிவு 304 கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்ற பந்த்ரா மாஜிஸ்திரேட் உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து சல்மான் கான் செய்துள்ள மேல் முறையீட்டை மும்பை அமர்வு நீதிமன்றம் விசாரித்து வருகிறது என்பது நினைவிருக்கலாம்.
No comments:
Post a Comment