Search This Blog

Monday, 10 June 2013

இனி நடிக்க மாட்டேன் – ரம்பா

இனி நடிக்க மாட்டேன் – ரம்பா


img1130610015_1_1      
                          ரம்பாவுக்கு சென்ற வாரம் பிறந்தநாள். பீல்டில் இல்லாவிட்டாலும் அவரை நினைவு வைத்து சில நிருபர்கள் போன் போட்டு வாழ்த்து தெரிவித்தார்கள். ரம்பா இப்போது கணவர், குழந்தையுடன் இருப்பது கனடாவில்.
வாழ்த்துக்கு நன்றி சொன்னவர், இனி நடிப்பதில்லை என்ற தனது முடிவை தெரிவித்திருக்கிறார். இப்படி சொல்கிறவர்கள்தான் உடனே நடிப்பதற்காக பிளைட் பிடித்து சென்னை வருவார்கள் என்பதால் நிருபர்கள் அலட்டிக் கொள்ளவில்லை. அதேநேரம் அவர் சொன்ன இன்னொரு விஷயம் முக்கியமானது.
ரம்பாவின் கணவரிடம் எக்கச்சக்க பணம் டாலராகவும், யூரோவாகவும் இருக்கிறது. அதனால் படம் தயாரித்தால் என்ன என்றொரு யோசனை ரம்பாவுக்கு. நல்ல கதை அமைந்தால் படம் தயாரிக்கலாம் என்று இருக்கிறேன் என தெரிவித்திருக்கிறார்.
கதை இருந்தால் கனடாவுக்கு பேக்ஸ் செய்யுங்கள். அழகான தயாரிப்பாளர் காத்திருக்கிறார்.

No comments:

Post a Comment