விக்ரமனுக்காக சென்னை வந்த பிரபுதேவா!
தமிழ் சினிமாவில் நடன மாஸ்டராக களமிறங்கியவர் பிரபுதேவா. சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே, ராசாவே சித்தெறும்பு உன்னை கடிக்குதா உள்ளிட்ட சில பாடல்கள் மூலம் பிரபலமானவர், பின்னர் கதாநாயகனாகி, இப்போது பாலிவுட்டில் முன்னணி இயக்குனராக திகழ்கிறார். இந்த வளர்ச்சிக்கு நடுவே, மனைவியுடனான விவாகரத்து, நயன்தாராவுடன் பழகி பிரிந்தது என் பிரபுதேவாவின் பயணம் எதிர்நீச்சலும், சறுக்கலுமாக சென்று கொண்டிருக்கிறது.
தற்போது, ராம்போ ராஜ்குமார், ராமையயா வஸ்தவய்யா என்ற இரண்டு படங்களை இயக்கி வருகிறார். இந்த பிசியான நிலையிலும், விக்ரமன் இயக்கியுள்ள நினைத்தது யாரோ என்ற படத்தின் ஆடியோ விழாவுக்காக சென்னைக்கு வந்திருந்தார் பிரபுதேவா, அப்போது விக்ரமன் இயக்கிய வானத்தைப்போல படத்தில் நான் நடித்திருக்கிறேன். ரொம்ப மென்மையான உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படம். அந்த படத்தில் நடித்த தாக்கம் இன்னும் எனக்குள் இருந்து கொண்டிருக்கிறது. அதுதான் எனனை இங்கு இழுத்து வந்துள்ளது. என்று சொன்ன பிரபுதேவா, இதுவரை ஆக்ஷன் கதைகளாக படமாக்கிய எனக்கு அடுத்து விக்ரமன் பாணியில் மென்மையான காதல் கதைகளை இயக்க வேண்டுமென்ற ஆசையும் ஏற்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment