பரபரப்பு குறைந்து போன கார்த்திகா-துளசி சகோதரிகள்!
நானும், எனது அக்காள் அம்பிகாவும் சினிமாவில் பரபரப்பான நடிகைகளாக வலம்வந்தது போல் எனது மகள்கள் கார்த்திகா-துளசியையும் பெரிய நடிகைகளாக கொண்டு வருவேன் என்று உற்சாகமாக சொல்லிவந்தவர் மாஜி நடிகை ராதா. அதேபோல், கார்த்திகாவை கோ படத்தில் நடிக்க வைத்தவர், பின்னர் பாரதிராஜா படத்தில் நடிக்க வைத்தார். ஆனால் அதன்பிறகுதான் கார்த்திகாவுக்கு சரியான படம் இல்லை. தற்போது டீல் என்ற படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். அடுத்து அவர் எதிர்பார்க்கிற பெரிய ஹீரோ படங்கள் கைசேரவில்லை.
அதேபோல், மணிரத்னத்தின் கடல் படத்தில் அறிமுகமான துளசி இப்போது ஜீவாவுக்கு ஜோடியாக யான் படத்தில் நடித்து வருகிறார். முதல் படத்திலிருந்து மாறுபட்டு அதிரடி கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். ஆனால், அடுத்து துளசிக்காக ராதா முயற்சி எடுக்கப்போகும் கம்பெனிகளில், அவரது உடல்கட்டு பெருத்துப்போயிருப்பதை காரணம் காட்டி தவிர்க்கிறார்களாம். அதேபோல் கார்த்திகாவுக்கு கேட்டாலும் மார்க்கெட் இல்லையே ஏதாவது குற்றம் குறைகளை சொல்லி பின்வாங்குகிறார்களாம்.
இதனால் அடுத்து என் மகள்களை பாலிவுட்டில் பெரிய நடிகைகளாக்கிக் காட்டுகிறேன் என்று சொல்லிக்கொண்டு இந்தி சினிமாவில் தீவிர முயற்சி எடுத்து வருகிறார் ராதா. இருப்பினும், எதிர்பார்த்தபடி மகள்களின் சினிமா வாழ்க்கையில் விறுவிறுப்பு இல்லாததால் அவரது முகத்தில் சோர்வு தென்படுகிறது. அதேபோல் கார்த்திகா-துளசியும்கூட தொடர்ந்து படப்பிடிப்பு இல்லாமல் பரபரப்பு குறைந்து காணப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment