கருத்து வேறுபாட்டால் திருமணத்தை நிறுத்தினேன்! பூஜா காந்தி
தமிழில் கொககி, திருவண்ணாமலை உள்பட சில படங்களில் நடித்தவர் கன்னட நடிகையான பூஜகாந்தி. சமீபத்தில் கன்னடத்தில் இவர் நடித்த படம் கரிமேடு என்ற பெயரில் தமிழில் வெளியாகியுள்ளது. உண்மைக்கதையில் உருவான இப்படத்தில் ஜாக்கெட் அணியாமல் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் பூஜாகாந்தி.
மேலும், ஆனந்த கவுடா என்பவரை காதலித்து வந்த அவர் இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் பூஜா. அதுபற்றி அவரைக்கேட்டபோது நாங்கள் காதலித்தது உண்மைதான். அதையடுத்து திருமணத்திற்கான நிச்சயதார்த்தமும் நடந்தது.ஆனால், அதற்குள் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகள் காரணமாக திருமணத்தை நிறுத்தி விட்டேன். அதனால் இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் ஆசை என்னிடம் இல்லை என்று சொல்லும் பூஜாகாந்திக்கு எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் உள்ளதாக கூறியுள்ளார்.
No comments:
Post a Comment