குத்தாட்ட பாடலை எதிர்பார்க்கும் ப்ரியாமணி!
பருத்திவீரன் உள்பட பல படங்களில் நடித்தவர் ப்ரியாமணி. தமிழ்ப்படங்களில் கண்ணியமாக நடித்திருந்தாலும் தெலுங்கு, கன்னட படங்களில் அத்துமீறி நடித்திருக்கிறார் அவர். என்றபோதும், சமீபகாலமாக ப்ரியாமணியின் மார்க்கெட் ஆட்டம் கண்டு கிடக்கிறது. அதனால் மீண்டும் பரபரப்பான இடத்தை பிடித்து விட வேண்டும் என்பதற்காக தெலுங்கு படங்களில் அங்குள்ள கவர்ச்சி நடிகைகளே ஆடிப்போகும் அளவுக்கு அதிரடி கவர்ச்சி நடிகையாக உருவெடுத்து நிற்கிறார் ப்ரியாமணி.
அதோடு, சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஷாரூக்கானுடன் இணைந்து ஒரு பாட்டுக்கு குத்தாட்டமாட நயன்தாரா மறுத்த வாய்ப்பை கைப்பற்றி வைத்திருந்த ப்ரியாமணி, சமீபத்தில்தான் அந்த பாடலுக்கு அவருடன் நடனமாடியுள்ளார். ராஜூசுந்தரம் நடனம் அமைத்த அப்பாடல் பிரமாண்ட செட் அமைத்து படமாக்கப்பட்டுள்ளது. பாடலில் படுகவர்ச்சியான உடையில்லை என்பதால், தனது ஆட்டத்தை நறுக் தெறித்தார் போல் ஆடியுள்ளாராம் ப்ரியாமணி. இந்த படம் பாலிவுட்டில் வெளியாகும்போது, அங்கு படம் பார்க்கும் ஒவ்வொரு ரசிகர்களும் எனது ஆட்டத்தைப்பார்த்து அதிர்ந்து போவார்கள். அப்படியொரு ஆட்டம் ஆடியிருக்கிறேன் என்று கோலிவுட்டில் வட்டாரங்களில் சொல்லி வரும் ப்ரியாமணி. அதன்பிறகு கண்டிப்பாக இந்தியில் இருந்து என்னைத்தேடி படவாய்ப்புகள் வரும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறாராம்.
No comments:
Post a Comment