Search This Blog

Thursday, 30 May 2013

விஸ்வரூபம் - தமிழில் எனக்கு கிடைத்த ஹாலிவுட்! ஆண்ட்ரியா

விஸ்வரூபம் - தமிழில் எனக்கு கிடைத்த ஹாலிவுட்! ஆண்ட்ரியா

Vishwaroopam is tamil hollywood for me says Andrea

                              விஸ்வரூபம் வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தை வேகமாக படமாக்கி வருகிறார் கமல். முதல் பாகத்தின் முடிவில் இரண்டாம் பாகம் இந்தியாவில் என்று கார்டு போட்டு முடித்த கமல், இரண்டாம் பாகம் முழுக்க இந்தியாவில் நடப்பது போல் படமாக்கி வருகிறார். என்றாலும் அவர் எதிர்பார்த்தது போன்ற லொகேஷன்கள் இங்கு கிடைக்காததால் தற்போது தாய்லாந்தில் முகாமிட்டு படமாக்கி வருகிறார் கமல்.

அதோடு, முதல் பாகத்தில் பூஜாகுமாருக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் இந்த இரண்டாம் பாகத்தில் ஆண்ட்ரியாவுக்கு முக்கியத்தும் கொடுக்கிறாராம். அதனால் சில மாதங்களாகவே விஸ்வரூபம் படக்குழுவோடுதான் சுற்றிக்கொண்டிருக்கிறார் ஆண்ட்ரியா. கமல் சாருடன் நடிப்பதே கடினம். ஆனால் இந்த படத்தைப்பொறுத்தவரை கதாநாயகி ரேஞ்சுக்கு எனது கேரக்டர் பெரிதாகி உள்ளது என்று கூறியுள்ள ஆண்ட்ரியா, விஸ்வரூபம் படம் எனக்கு தமிழில் கிடைத்த ஒரு ஹாலிவுட் படம் என்கிறார்.

மேலும், இனிமேல் இப்படியொரு வாய்ப்பு எனக்கு கிடைக்குமோ கிடைக்காதோ. ஆனால், ஒரு மெகா படத்தில் கமல் சாருடன் நடித்து விட்ட திருப்தி எனக்கு இந்த படத்தில் கிடைத்து விடும் என்று சொல்லும் ஆண்ட்ரியா, எனது சினிமா கேரியரில் இது மிக முக்கியமான படம். அதற்காக கமல் சாருக்கு நான் வாழ்நாள் முழுக்க நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என்கிறார்.

No comments:

Post a Comment