Search This Blog

Wednesday, 29 May 2013

பெப்சி ஸ்டிரைக் வாபஸ்

பெப்சி ஸ்டிரைக் வாபஸ்

FEFSI strike call off

                         சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக "பெப்சி தொழிலாளர்கள் நடத்தி வந்த வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. தென் இந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (பெப்சி) நிர்வாகிகள் சிலருக்கும், சினிமா டிரைவர்கள் சங்க நிர்வாகிகளுக்கும் இடையே, சில தினங்களுக்கு முன் மோதல் ஏற்பட்டது. பெப்சி அமைப்பினர் இப்பிரச்னைக்குத் தீர்வு காணும் வரை, படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள மாட்டோம் எனத் தெரிவித்தனர். இதையொட்டி, கடந்த 2 நாட்களாக சினிமா படப்பிடிப்புகளும், "டிவி சீரியல்களும் ரத்து செய்யப்பட்டன.இந்த நிலையில், தமிழக தொழிலாளர் நலத் துறை அமைச்சர், இத்துறையின் கூடுதல் கமிஷனர் மற்றும் பெப்சி நிர்வாகிகள் இடையே நடந்த பேச்சு வார்த்தைக்கு பின், பெப்சி வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment