Search This Blog

Wednesday, 29 May 2013

தலைவா பட்ஜெட் எகிறியதாம்!

தலைவா பட்ஜெட் எகிறியதாம்!

Thalaivaa budget exceeds                                                                                           
                  
                             மதராசப்பட்டினம் விஜய் இயக்கத்தில், விஜய் நடித்து வரும் படம் தலைவா. இப்படம் மும்பையில் ஆரம்பிக்கப்பட்டு ஆஸ்திரேலியாவில் முடிந்திருக்கிறது. ஆனால், வெளிநாட்டில்தான் கதைப்படி விஜய்யை மயக்கி இந்தியாவுக்கு கொண்டு வரும் காட்சிகளில் நடித்தாராம் அமலாபால். இதனால் பெருவாரியான காட்சிகள் அங்குதான் படமாகியுள்ளது. மேலும், அங்குள்ள லொகேஷன்களில்தான் விஜய், அமலாபால் மட்டுமின்றி, விஜய்யும், மும்பை நடிகை ராகினி சம்பந்தப்பட்ட பாடல் காட்சியையும் படமாக்கினார்களாம். அதனால் மும்பையைவிட ஆஸ்திரேலியாவில்தான் அதிக நாட்கள் முகாமிட்டுள்ளது தலைவா யூனிட்.

இதன்காரணமாக, பாடல் காட்சிகளுக்கு அங்குள்ள மாடல் அழகிகளைதான் ஆட வைத்தார்களாம். அவர்களுக்கெல்லாம் இங்குள்ள நடன கலைஞர்களை மாதிரி சம்பளம் இல்லையாம். ஒருநாளைக்கு ஆடவே 100 டாலர்கள் சம்பளமாம். அந்த வகையில் 300 நடன கலைஞர்களை பாடல் காட்சிகளுக்கு பயன்படுத்தினார்களாம். இதனால், போட்டதை விட பட்ஜெட் பன்மடங்கு எகிறி விட்டதாம். இப்படி பத்து நாட்களுக்கும் மேலாக படப்பிடிப்பு நடத்தப்பட்டதால் தலைவா படத்தை தயாரிக்கும் சந்திரபிரகாஷ் ஜெயின் நிறுவனம் ஆடிப்போனார்களாம்.
                   
ஆனால், அவர்களை சுற்றியிருக்கும் அடிபொடிகள், படம் நன்றாக வந்திருக்கிறது. பிறகு எதற்கு இந்த செலவுக்கெல்லாம் கவலைப்படுகிறீர்கள். போட்டதை விட பல மடங்கு அள்ளி விடலாம் என்று அவர்களை கூல் ப்ணணி வைத்திருக்கிறார்களாம்.

No comments:

Post a Comment