கஞ்சா கருப்பு தயாரிக்கும் படத்தில் மனைவி அனிதாவுடன் புஷ்பவனம் குப்புசாமி நடிக்கிறார்
காமெடி நடிகர் கஞ்சா கருப்பு வேல்முருகன் போர் வெல்ஸ் என்ற பெயரில் புது படம் தயாரிக்கிறார்.
போர்வெல் தொழிலாளர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் தயாராகிறது. எம்.பி.கோபி இயக்குகிறார். இவர் மலையன் படத்தை டைரக்டு செய்தவர். வேல்முருகன் போர் வெல்ஸ் படத்தில் பிரபல நாட்டுப்புற பாடகர்களாக புஷ்பவனம் குப்புசாமியும் அவரது மனைவி அனிதா குப்புசாமியும் நடிக்கின்றனர். படத்தில் ஒரு பாடலை இருவரும் பாடியுள்ளனர். இந்த பாடல் காட்சியில் சேர்ந்து நடிக்கவும் செய்கிறார்கள்.
இந்த பாடலுக்காக நாட்டரசன்கோட்டை கண்ணாத்தா, சிலைகள் வடிவமைக்கப்பட்டு அந்த அரங்க அமைப்பில் நூற்றுக்கணக்கான நடன கலைஞர்களுடன் புஷ்பவனம் குப்புசாமியும் அனிதாவும் பாடி நடிக்க இப்பாடல் காட்சி படமாக்கப்படுகிறது. இப்படத்தில் கஞ்சா கருப்பு போர்வெல் உரிமையாளர் வேடத்தில் நடிக்கிறார்.
அங்காடி தெரு மகேஷ், இமான் அண்ணாச்சி, ஆருசி, பிளாக் பாண்டி, தீப்பெட்டி கணேசன் ஆகியோரும் நடிக்கின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் இதன் படப்பிடிப்பு நடக்கிறது. அத்துடன் தண்ணீர் வசதி இல்லாத 5 கிராமங்களுக்கு இலவசமாக போர் போட்டு கொடுக்க கஞ்சா கருப்பு முடிவு செய்துள்ளார்
No comments:
Post a Comment