கேரளாவில் கல்லூரி மாணவியுடன் மலையாள நடிகர் திருமணம்
மலையாள திரையுலகின் இளம் நடிகர்களில் ஒருவர் ஆசிப் அலி. இவர், கடந்த 2009-ல் “ரிது” என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனார்.
அதன் பின்பு அபூர்வ ராகங்கள், டிராபிக், பேச்சலர் பார்ட்டி உள்பட பல்வேறு மலையாள படங்களில் நடித்து பிரபலமானார். இப்போதும் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.
இவரது பெற்றோர் சாகித் அலி-நவீ ஜாண். இவர்கள் ஆசிப் அலிக்கு திருமணம் செய்ய முடிவு செய்து பெண் பார்த்தனர். கண்ணூரைச் சேர்ந்த மாசில் ஆசாத்-மும்தாஜ் ஆகியோரின் மகள் ஷமாவை பெண் பார்த்து பேசி முடித்தனர்.
ஷமா கோழிக்கோட்டில் உள்ள ஒரு பெண்கள் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். ஆசிப் அலி-ஷமா திருமணம் கண்ணூரில் உள்ள ஆடிட்டோரியத்தில் நேற்று நடந்தது.
இதில் ஆசிப் அலி மற்றும் ஷமாவின் உறவினர்கள், ஆசிப் அலியின் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர். உள்ளூர் எம்.பி., எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இவர்களின் திருமண வரவேற்பு வருகிற 30-ந்தேதி தொடுபுழாவில் நடக்கிறது.
இதில் பங்கேற்கும்படி உறவினர்கள், நண்பர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோல திரையுலக நண்பர்களுக்காக வருகிற 1-ந்தேதி நெடும்பாஞ்சேரியிலும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.
No comments:
Post a Comment