விஜய் பிறந்த நாளில் தலைவா ஆடியோ ரிலீஸ்?
நடிகர் விஜய் பிறந்த நாளான ஜூன் 22ம்தேதி தலைவா படத்தின் ஆடியோவை வெளியிடப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்ரீ மிஸ்ரி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் படம் தலைவா.
தாண்டவம் படத்திற்குப் பிறகு ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் விஜய், அமலா பால் ஜோடியாக நடிக்கின்றனர். ஜீ.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கும் இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது.
படத்தின் பெரும்பாலான வேலைகள் முடிந்த நிலையில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ம் தேதி நடைபெறவிருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தினை கேரளாவில் வெளியிடும் உரிமையை தமீன்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஷிபு என்பவர் பெற்றுள்ளார்.
No comments:
Post a Comment