கிளைமாக்சை முடிக்க முதுகுவலியில் நடித்த அஜீத்
நீண்ட தூரம் பயணம் செய்ததால் படப்பிடிப்பு தலத்தில் அஜீத்துக்கு திடீர் முதுகுவலி ஏற்பட்டது. காய்ச்சலிலும் அவதிப்பட்டார். ஆனால் படப்பிடிப்பை தள்ளி வைக்க முடியாத சூழலில் டைரக்டர் இருந்தார். உடனடியாக படப்பிடிப்பை துவங்க வேண்டிய கட்டாயமும் இருந்தது. படப்பிடிப்பு தன்னால் பாதிக்கப்படக்கூடாது என்று அஜீத் முடிவு செய்து காய்ச்சல் மற்றும் முதுகுவலியை பொருட்படுத்தாமல் நடித்தார்.
கிளைமாக்சும் மேலும் சில சீன்களும் அங்கு பட மாக்கப்பட்டன. அனைத்தையும் முடித்து கொடுத்தார். அஜீத்தின் தொழில் ஈடுபாட்டை படப்பிடிப்பு குழுவினர் வியந்து பாராட்டினர். இந்த படத்துக்கு இன்னும் பெயர் வைக்க வில்லை. ‘வலை’ என்ற பெயரைவைக்க பரிசீலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
No comments:
Post a Comment