Search This Blog

Thursday, 23 May 2013

சில்க் ஸ்மிதாவே ரோல் மாடலாக எடுத்துக்கொண்டு சாதிக்கப்போகிறேன்! – சனாகான்

சில்க் ஸ்மிதாவே ரோல் மாடலாக எடுத்துக்கொண்டு சாதிக்கப்போகிறேன்! – சனாகான்


Climax Sana Khan Malayalam Song as Silk Smitha  
                                  
                                சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை கதையில் உருவாகியுள்ள நடிகையின் டைரி படத்தில் நடித்திருப்பவர் சனாகான். அதற்கு முன்பே பல படங்களில் நடித்திருந்தபோதும், இப்போதுதான் சனாகான் என்ற பெயரை ரசிகர்கள் உச்சரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அதற்கு காரணம் சில்க்ஸ்மிதா. அவரது கதாபாத்திரத்தில் நடிப்பதால் சனா மீதும் வெளிச்சம் பாய்ந்திருக்கிறது.
அதனால், தனது மார்க்கெட்டு சூடுபிடித்திருக்கும் இந்த நேரத்தை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் சனாகான், சில்க்கைப்பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் அவரது கதையில் நடிக்க வேண்டும் என்றதும் அவரது முக்கியமான படங்களையெல்லாம் பார்த்தேன். அப்போதுதான் கவர்ச்சி நடிகையாக அறிமுகமாகி எந்தமாதிரி கேரக்டர்களில் எல்லாம் அவர் நடித்திருக்கிறார் என்பது புரிந்தது.
அந்த வகையில், அவர் வேடத்தில் நடிக்க எனக்கு சான்ஸ் கிடைத்தது பெருமையான விசயம். ஆனால், இனி வருங்காலங்களில் சில்க்கை ரோல் மாடலாக எடுத்துக்கொண்டு, சினிமாவில் சாதிக்கப்போகிறேன். அவரை மாதிரி என்னால் 100 சதவிகிதம் நடிக்க முடியாது என்றாலும், அவரை பின்பற்றி ஒரு 50 சதவிகிதமாவது நடிப்பேன். சில்க் மாதிரி ஒரு நடிகை வந்திருக்கிறார் என்று அனைவரையும் சொல்ல வைப்பேன் என்கிறார் சனாகான்.

No comments:

Post a Comment