திருமணம் செய்தேனா?
பெங்களூர் : ‘நான் யாரையும் திருமணம் செய்யவில்லை’ என்று சுபா புஞ்சா கூறினார். தமிழில், ‘மச்சி’, ‘திருடிய இதயத்தை’, ‘சண்முகா’. ‘ஒரு பொண்ணு ஒரு பையன்’ உட்பட சில படங்களில் நடித்தவர் கன்னட நடிகை சுபா புஞ்சா. இவர் கன்னட நடிகர் விஜய்யை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டதாகச் செய்திகள் வெளியாயின. இதனால் அவர், சினிமாவில் நடிக்க மாட்டார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் அவர் கன்னடத்தில் நடித்துள்ள பராரி என்ற படம் நேற்று ரிலீஸ் ஆனது.
இதுபற்றி அவர் கூறியதாவது: விஜய்யுடன் சேர்ந்து நடித்ததால் என்னை பற்றி வதந்திகள் வந்தது. அவருடன் சேர்ந்து நடிப்பதில்லை என்று ஏற்கனவே அறிவித்துவிட்டேன். இப்போதும் அந்த நிலைதான். நான் யாரையும் திருமணம் செய்யவில்லை. எனது கனவு காதலனை கண்டுபிடித்துவிட்டால் கண்டிப்பாகக் காதலிப்பேன். இன்னும் நான்கு வருடத்துக்கு திருமணம் செய்யும் திட்டம் இல்லை.
No comments:
Post a Comment