ஐஸ்வர்யாதனுஷின் தடாலடி முடிவுகள்!
3 படத்தையடுத்து ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் புதிய படம் வை ராஜா வை. இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன்ஷங்கர்ராஜா இசையமைக்கிறார். முதல் படத்தில் கோட்டை விட்ட ஐஸ்வர்யா இந்த படத்தில் வெற்றிபெற்றாக வேண்டும் என்பதால் ஒவ்வொரு விசயத்திலும் கவனமாக முடிவெடுக்கிறார்.
முக்கியமாக, கெளதம் கார்த்திக்கை நாயகனாக தேர்வு செய்தபோது, அவரது தந்தை குறுக்கிட்டு மகனுக்கு ஜாஸ்தியாக சம்பளம் கேட்டதால், அதை பரிசீலிக்காமல், உடனடியாக அனிருத்தை நாயகனாக்க துணிந்தார். அதன்பிறகுதான் வழிக்கு வந்திருக்கிறார் கார்த்திக்,.
பின்னர், ஒரு முக்கிய வேடத்துக்கு சமுத்திரக்கனியை அழைத்து பேசினாராம். ஆனால் அவரோ சாட்டை படத்தில் தனது நடிப்பு பேசப்பட்டதை முன்வைத்து ஒரு பெரிய தொகையை சம்பளமாக கேட்டாராம். அதோடு படத்தை தயாரிப்பது பெரிய நிறுவனமாயிற்றே என்றும் கூறியிருக்கிறார்.
இதனால் யோசிதத ஐஸ்வர்யா, அவர் கேட்கிற தொகையை கொடுத்து புக் பண்ணும் அளவுக்கு அந்த கேரக்டர் ஒன்றும் வெயிட்டானது இல்லை என்று இப்போது அவருக்குப்பதிலாக வேறு நடிகரை தேடி வருகிறார். ஐஸ்வர்யாவின் இந்த அதிரடி முடிவுகளால் படத்தில் புக்காகியிருக்கும் மற்ற கலைஞர்கள் சம்பளம் பற்றி வாய் திறக்கவே அச்சப்பட்டுக்
கொண்டிருக்கிறார்களாம்
No comments:
Post a Comment