Search This Blog

Sunday, 21 April 2013

டிக்கெட் கட்டணத்தை குறைக்க வேண்டும்

டிக்கெட் கட்டணத்தை குறைக்க வேண்டும்

சென்னை : ஸ்ரீநாத் கிரியேஷன்ஸ் சார்பில் சாந்தி ஸ்ரீதரன், வி.மணிவண்ணன் தயாரிக்கும் படம், ‘இங்கு காதல் கற்றுத் தரப்படும்’. ஸ்ரீநாத், தர்ஷனா ஜோடி. எம்.ஸ்ரீதரன் இயக்குகிறார். ஒளிப்பதிவு, கோபி சபாபதி. இசை, சாகித்யா. இதன் பாடலை வெளியிட்டு, டி.ராஜேந்தர் பேசியதாவது:  தமிழ்நாட்டில் தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வருவதில்லை. பெண்கள் தியேட்டர் பக்கமே வருவதில்லை. இங்கு ஒவ்வொரு தியேட்டராக மூடிக்கொண்டு இருக்கிறார்கள். இதற்கு காரணம் டிக்கெட் கட்டணம் அதிகரித்ததுதான். அதை குறைத்தால் ரசிகர்கள் தியேட்டருக்கு வருவார்கள்.   

 சினிமாவில் சுயநலம் பெருகி விட்டது. சினிமாவை காப்பாற்ற யாரும் நினைப்பதில்லை. நான் சினிமாவை நேசிக்கிறேன். ஒவ்வொரு தியேட்டரும் எனக்கு கோயில். ஒவ்வொரு ரசிகனும் எனக்கு தெய்வம். இவ்வாறு அவர் பேசினார். கேயார், ஹேம்நாக் பாபுஜி, எம்.எஸ்.பிரபு, கில்டு ராஜா உட்பட பலர் பேசினர்.

No comments:

Post a Comment