Search This Blog

Wednesday, 5 February 2014

கமல் ஹாஸனுக்கு பிஆர்ஓ யூனியன் வாழ்த்து!

கமல் ஹாஸனுக்கு பிஆர்ஓ யூனியன் வாழ்த்து!

பத்மபூஷண் விருது பெற்ற கமல் ஹாஸனுக்கு பிஆர்ஓ யூனியன் சார்பில் வாழ்த்து தெரிவித்தனர் அதன் நிர்வாகிகள்.
கமல் ஹாஸனுக்கு சமீபத்தில் பத்மபூஷண் விருது அறிவித்தது மத்திய அரசு.
இதைத் தொடர்ந்து அவருக்கு தமிழ் திரையுலகினர், எழுத்தாளர்கள், கவிஞர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நேரில் வந்து வாழ்த்துக் கூறி வருகின்றனர்.
தொடர்ந்து பலரும் கமலை வாழ்த்த விரும்புவதை உணர்ந்து, தனது வேலைகளை சற்று ஒதுக்கி வைத்து அவர்களைச் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றுக் கொள்கிறார்.

இது அவரது ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களை பெரும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கமல் ஹாஸன் என்ற பெரிய கலைஞரை தாங்களும் வாழ்த்த முடியும், அவருடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ள முடியும் என்பதே பலரையும் சந்தோஷப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், கமல்ஹாஸனை தென்னிந்திய பத்திரிகை தொடர்பாளர் யூனியன் நிர்வாகிகள் நேரில் சந்தித்து தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

யூனியனின் தலைவர் டயமண்ட் பாபு, செயலாளர் பெரு துளசி பழனிவேல், பொருளாளர் பாலன், துணைத் தலைவர்கள் கோவிந்தராஜ், வெங்கட், செயற்குழு உறுப்பினர்கள் நிகில் முருகன், கிளாமர் சத்யா, மூத்த உறுப்பினர் நெல்லை சுந்தரராஜன், தயாரிப்பாளர் சங்க செயற்குழு உறுப்பினரும் பிஆர்ஓவுமான விஜயமுரளி, சிங்காரவேலு ஆகியோர் கமல் ஹாஸனுக்கு பொன்னாடை போர்த்து, மலர்க் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment