Search This Blog

Wednesday, 5 February 2014

நட்ட நடு ராத்திரியில் சிம்புவின் வீட்டில் ஹன்ஷிகா: நடந்தது என்ன…???

நட்ட நடு ராத்திரியில் சிம்புவின் வீட்டில் ஹன்ஷிகா: நடந்தது என்ன…???

‘வல்லவன்’ படம் வந்த நேரத்தில் நயன்தாராவின் மன்மதனாக திகழ்ந்தவர் சிம்பு. ஆனால் இடையில் ஏற்பட்ட மனக் கசப்பால் இருவருமே பிரிந்தனர்.

தற்போது சிம்புவின் ஆசை நாயகியாக நிஜத்தில் இருந்து வருபவர் ஹன்ஷிகா மோத்வானி. ஆனால் தனது சொந்தப்படமான ’இது நம்ம ஆளு’ படத்தில் மீண்டும் நயன்தாராவையே டிக் செய்தார் சிம்பு.

இதனால் ஹன்ஷிகாவுடனான சிம்புவின் காதல் அவ்வளவு தான் என்று செய்திகள் வெளியாகின. அதற்கேற்றாற்போல் அவர்களும் இதைப்பற்றி வாய்த் திறக்கவில்லை. உடனே சிம்பு ஹன்ஷிகா காதல் முறிந்து விட்டது என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் சிம்புவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லி ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் ஹன்ஷிகா.

நேற்று 3 ஆம் தேதி சிம்புவின் பிறந்தநாள்.

இதற்காக நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு சிம்புவின் வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த ஹன்ஷிகா சிம்புவே எதிர்பார்க்காத வண்ணம் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் சொல்லி கையில் ஒரு பெரிய பொக்கேயும், அவருக்காக தயாரிக்கப்பட்ட ஒரு பிரம்மாண்ட கேக்கையும் அன்புப் பரிசாகக் கொடுத்திருக்கிறார்.

ஹன்ஷிகாவின் வருகையை கொஞ்சமும் எதிர்பார்க்காத சிம்புவோ உற்சாகத்தோடு அந்தக் கேக்கை வாங்கி தனது வீடு இருந்த தெருவில் வைத்து ஹன்ஷிகா மற்றும் தனது நெருங்கிய நண்பர்கர் முன்னிலையில் வெட்டி, ஹன்ஷிகாவுக்கு ஒரு துண்டை எடுத்து வாயில் ஊட்டி மகிழ்ந்திருக்கிறார்.

இதன்மூலம் சிம்பு – ஹன்ஷிகா காதல் முறிவு என்று தொடர்ந்து வரும் செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் ஹன்ஷிகா.

இந்த ஆண்டு எனக்கு முதல் பிறந்த நாள் வாழ்த்து ஹன்சிகாவின் வாயிலிருந்து கிடைத்திருப்பதால், இது எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்வீட்டான வருடமாக அமையப்போகிறது என்று பூரித்துப்போயிருக்கிறாராம் சிம்பு.

No comments:

Post a Comment