Search This Blog

Sunday, 9 February 2014

வீரம் இந்தி ரீமேக்கில் நடிக்கிறார் சல்மான்கான்!

வீரம் இந்தி ரீமேக்கில் நடிக்கிறார் சல்மான்கான்!

அஜித், தமன்னா, நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கிய ‘வீரம்’ கடந்த பொங்கல் தினத்தன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

தற்போது இந்தப் படம் இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட உள்ளது. இதனை இந்தியிலும் சிறுத்தை சிவாவே இயக்குகிறார். அஜித் வேடத்தில் சல்மான்கானும், தமன்னா வேடத்தில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் நடிக்கின்றனர். இந்தி திரைக்கதையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து சிறுத்தை சிவா, தனது உதவியாளர்களுடன் ஆலோசனை செய்து வருகிறார். படப்பிடிப்பு வரும் மே மாதம் தொடங்க உள்ளது.

சல்மான்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ஜெய் ஹோ’ மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளதால், இந்த படமும் பாலிவுட்டில் பெரிய ஹிட் ஆகும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பிரித்திஷ் நந்தி வாங்கியுள்ளார்.

முன்னதாக வீரம் படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க தமன்னா ஆர்வம் காட்டி வந்தார். இந்நிலையில் அந்த வாய்ப்பு இப்போது ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு சென்றுவிட்டது. இதனால் தமன்னா அதிர்ச்சியில் உள்ளார்.

No comments:

Post a Comment