Search This Blog

Thursday, 26 December 2013

படம் ஓடலேன்னா ரெஸ்டாரென்ட் நடத்தி பொழைப்பேன் – ஜீவா

படம் ஓடலேன்னா ரெஸ்டாரென்ட் நடத்தி பொழைப்பேன் – ஜீவா

ஜீவா மிகப்பெரிய நம்பிக்கை வச்சு நடித்த படங்கள்தான் முகமூடி, நீதானே என் பொன்வசந்தம். இந்த படங்கள் வெற்றி பெறுகிறபோது தானும் மேல்தட்டு ஹீரோவாகி விடுவோம் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால், இரண்டு படங்களுமே சொல்லிவைத்தார் போல் தோல்வியடைந்து ஜீவாவின் மேல்தட்டு கனவை கலைத்து விட்டன. அதன்பிறகு என்றென்றும் புன்னகை, யான் என்ற இரணடு படங்களில் நடித்து வந்தார். அதில் என்றென்றும் புன்னகை ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதனால் மீண்டும் உற்சாகமாகியுள்ளார் ஜீவா.
இப்படத்தில் நடித்தது பற்றி அவர் கூறுகையில், என்றென்றும் புன்னகைன்னு டைட்டீல் வச்சிட்டு, படம் முழுக்க என்னை சிடுமூஞ்சியாவே காட்டியிருக்கிறார் டைரக்டர். அந்த படத்தில் நடித்தபோது டைரக்டரிடமும் இதுபற்றி அடிக்கடி சொன்னேன். ஆனால் படம் ரிலீசாகும்போது இதோட ரிசல்ட் தெரியுமுன்னாரு. அதே மாதிரி படமும் இப்ப வெற்றி பெற்றிருக்கு. அதனால் மறுபடியும் உற்சாகமாகியிருக்கேன் என்கிறார்.
மேலும், ஒருவேளை இந்த படமும் ஓடலேன்னா ஏதாச்சும் ரெஸ்டாரென்ட் நடத்தி பொழைச்சிக்கலாம்னு நெனச்சிருந்தேன். நல்லவேளையா படம் ஓடி, என்னை சீனிமாவுல தொடர்ந்து நடிக்கிறதுக்கு ஒரு வழி காமிச்சிருக்கு. இனிமே இந்த வெற்றியை தக்க வைச்சிக்கிற மாதிரியான கதைகளா செலக்ட் பண்ணி நடிப்பேன் என்கிறார் ஜீவா.

No comments:

Post a Comment