அஜீத்தின் வீரம் படத்துக்கு தணிக்கைத்துறை ‘யு’ சான்று வழங்கியது
அஜீத்தின் ‘வீரம்’ படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்கின்றனர். ஆனாலும் முன்கூட்டியே படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பி வைத்தார்கள். தணிக்கை குழு உறுப்பினர்கள் படத்தை பார்த்து ‘கட்’ எதுவும் கொடுக்காமல் ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர்.
அரசின் கேளிக்கை வரி பெறுவதற்கு ‘யு’ சான்று அவசியம். ‘வீரம்’ படம் அரசின் வரிவிலக்குக்கு தகுதி பெற்றுள்ளது. இப்படத்தில் அஜீத் ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். அண்ணன், தம்பி பற்றிய கதை. இதில் அஜீத் வேட்டி சட்டையுடன் நடித்துள்ளார். விதார்த் சந்தானம், விதுராமன் போன்றோரும் நடித்துள்ளனர். சிவா இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே சிறுத்தை படத்தை டைரக்டு செய்துள்ளார்.
இதற்கு முன் ரிலீசான ‘ஆரம்பம்’ படமும் ‘யு’ சான்றிதழ் பெற்றது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment