சித்தார்த்தின் ரீ-மேக் ஆர்வம்!
காதலில் சொதப்புவது எப்படி படம் மூலம், தமிழில் மறுபிரவேசம் செய்தார் சித்தார்த். அதைத் தொடர்ந்து, என் எச் – 4, தீயா வேலை செய்யணும் குமாரு படங்களில் நடித்தவர், இப்போது, ஜிகர்தண்டாவை முடித்து, காவியத்தலைவன் என்ற படத்தில் நடிக்கிறார். இதன் மூலம் தமிழில், தனக்கென ஒரு நிலையான இடத்தை பிடித்துள்ள சித்தார்த், அடுத்து, மாறுபட்ட கதாநாயகனாகவும் தன்னை நிறுத்திக்கொள்ளும் முயற்சியில்இறங்கியுள்ளார்.
அதன் காரணமாக, கன்னடத்தில் வெளியான, லூசியா என்ற படத்தின், தமிழ் ரீ-மேக்கில் நடிக்கும் முடிவில் உள்ளார்.
சைக்காலஜிக்கல், த்ரில்லர் கதையில் உருவாகியுள்ள இந்த, லூசியா படம், வெளியாகி வெற்றி பெற்றது மட்டுமின்றி, லண்டனில் நடந்த இந்திய திரைப்பட விழாவில், சிறந்த படம் என்று, பார்வையாளர்களால் தேர்வு செய்யப்பட்டது. அதனால்,
ஏற்பட்ட தாக்கம் தான், இப்படத்தில் நடிக்கும் ஆர்வத்தை, சித்தார்த்துக்கு தூண்டியதாம்.
No comments:
Post a Comment