ரஜினி பிறந்தநாளையொட்டி ஏழைகளுக்கு வேட்டி–சேலை: ரசிகர்கள் ஏற்பாடு
ரஜினியின் 64–வது பிறந்த நாள் விழா நாளை (12–ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ரசிகர்கள் 4 நாட்கள் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்கள்.
அண்ணா நகரில் 64 பேருக்கு வேட்டி, 64 பேருக்கு புடவை, மற்றும் உணவு வழங்கப்பட்டது. அண்ணா நகர் எம்.ரஜினிடில்லி, செனாய் நகர் ஜி.எஸ்.ஸ்ரீகாந்த், அரும்பாக்கம் டி.தாமஸ் இதற்கான ஏற்பாடுகளை செய்தனர். தாம்பரம் பகுதியில் ஊனமுற்றோருக்கு இஸ்திரி பெட்டி, தையல் எந்திரங்களை எம்.எஸ்.முருகன், தாம்பரம் கேசவன், பழக்கடை ஆர்.முருகன் வழங்கினார்கள்.
நெல்சன் மாணிக்கம் ரோடு ஆஷ நிவாஸ் சிறுவர் இல்லத்தில் 100 பேருக்கு உணவும் சைதாப்பேட்டை சுப்ரமணியசாமி கோவிலில் 64 பேருக்கு வேட்டி, 64 பேருக்கு புடவை வழங்கும் நிகழ்ச்சியும் சைதை ரவி, சைதை ஆர்.முருகன், ரஜினி கிரிதரன் ஆகியோர் ஏர்பாட்டில் நாளை நடக்கிறது.
12–ந்தேதி காலை 7 மணிக்கு ராகவ லாரன்ஸ் டிரஸ்ட் குழந்தைகளுக்கு சூளைமேடு ரவிச்சந்திரன், வீரா. ஜி.சம்பத்குமார் ஏற்பாட்டில் அறுசுவை உணவு வழங்கப்படுகிறது. தி.நகர் திருப்பதி தேவஸ்தானத்தில் வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. தி.நகர் பேப்பர் நியூஸ் சீனு இதற்கான ஏற்பாட்டை செய்துள்ளார்.
வளசரவாக்கம் ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் நேசம் காப்பகத்தில் வளசை எம்.ஆனந்த், வாஸ்து விநாயகம், சுந்தரபாபு, வி.எஸ்.குமார் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்படுகிறது. அம்பத்தூர் ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் கொரட்டூர் சரஸ்வதி அம்மாள் ஆதரவற்றோர் இல்லத்தில் அம்பத்தூர் ஐ.அப்துல்துரைராஜ், மகேஷ், ஆல்பரட் கெனி, ஜி.ரமேஷ், ரஜினிமூர்த்தி ஆகியோர் உணவு வழங்குகிறார்கள்.
No comments:
Post a Comment