காமெடியில் பட்டையக்கிளப்பிய விஜய்!
விஜய் படங்கள் என்றாலே அவருக்கான ரசிகர்கள் மத்தியில் ஒருவித எதிர்பார்ப்பு இருக்கும். குறிப்பாக, அதிரடி நடனம், பஞ்ச் டயலாக் என்று ஆர்வத்துடன் எதிர்பார்ப்பார்கள். அதனால் ரசிகர்களை கருத்தில் கொண்டே கதைகளை கவனமாக தேர்ந்தெடுத்து நடிப்பார் விஜய்.
ஆனால், தலைவா படத்திற்கு ஏற்பட்ட தடை தாமதங்களுக்குப்பிறகு விஜய்யின் நிலையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. தற்போது நடித்து வரும் ஜில்லா படத்தில் வழக்கம்போல் ஒரு அதிரடியான ஓப்பனிங் பாடலோடு என்ட்ரி கொடுப்பவர், ஆட்டம் பாட்டம் என்று தூள் கிளப்புகிறாராம். ஆனால், எதிரிகளுடன் மோதும் ஆவேச காட்சிகளில் வழக்கமாக விடும் பஞ்ச டயலாக்குகள் இந்த படத்தில் இல்லையாம். அதேசமயம், பஞ்ச் டயலாக் பேச வேண்டிய காட்சிகளில் வாயால் வசனம் பேசாமல் கையால் பேசுகிறாராம். அவரது அடியைப்பார்த்து இப்போது பேசுவதாக இருந்தால் அவர் என்ன பேசியிருப்பார் என்பதை அவரது அபிமான ரசிர்களால் புரிந்து கொள்ள முடியுமாம்.
மேலும், ஒவ்வொரு பாடல் காட்சியையுமே படு பிரமாண்டமாக்கியுள்ளார்களாம். இதுவரை விஜய் படங்களில் இல்லாத அளவுக்கு நூற்றுக்கணக்கான வெளிநாட்டு நடனப்பெண்களை தேவதைகளாக ஆடவிட்டிருக்கிறார்களாம். குறிப்பாக, அந்த கூட்டத்தில் காஜல்அகர்வாலே காணாமல் போகும் அளவுக்கு கவர்ச்சியை வாரி இறைத்திருக்கிறார்களாம் வெளிநாட்டு அழகிகள்.
இதனால், பஞ்ச் டயலாக் இல்லாதது ரசிகர்களுக்கு நிச்சயமாக ஒரு குறையாக இருக்காது என்று கூறியுள்ள விஜய், வேலாயுதம் படத்தையடுத்து மீண்டும் சூரியுடன் இணைந்து காமெடி காட்சிகளிலும் பட்டையக்கிளப்பியிருக்கிறாராம்.
No comments:
Post a Comment