Search This Blog

Tuesday, 10 December 2013

செல்போனில் நடிகைக்கு ஆபாச மெசேஜ் அனுப்பும் மேனேஜர் பகீர் புகார்

செல்போனில் நடிகைக்கு ஆபாச மெசேஜ் அனுப்பும் மேனேஜர் பகீர் புகார்

ஹீரோயின் மதுரிமாவுக்கு அவரது மாஜி மேனேஜர் செல்போனில் ஆபாச மெசேஜ் அனுப்பி டார்ச்சர் செய்கிறார். நடிகைகள் ஸ்ருதி ஹாசன், ரம்யா உள்ளிட்ட பல நடிகைகளுக்கு செல்போன் வழியாக ரசிகர்கள் ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பி தொல்லை தந்தனர். இது குறித்து அவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இந்நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்கும் மதுரிமாவுக்கு அடிக்கடி செல்போனில் ஆபாச மெசேஜ் வந்தது. இதை அனுப்பியது மதுரிமாவின் மாஜி மேனேஜர்தான் என்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து மதுரிமா கூறும்போதும், எனது செல்போனில் அடிக்கடி ஆபாச எஸ்எம்எஸ் வந்துக்கொண்டிருக்கிறது. மேலும் என்னை பற்றி திரையுலகில் தவறான தகவல் பரப்புவதுடன், படங்களிலும் என்னை தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் நீக்கிவிட்டனர் என்றும் புரளி கிளப்பிவிடப்படுகிறது. இதையெல்லாம் யார் செய்வது என்பது எனக்கு தெரிந்துவிட்டது.

என்னிடம் மாஜி மேனேஜராக பணியாற்றியவர்தான் இப்படி செய்கிறார். நல்லவேளையாக அவர் பரப்பிய வதந்திகளை கண்டு இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ஏமாறவில்லை. அவர் ஏன் இப்படி செய்கிறார் என்பதுதான் தெரியவில்லை. செல்போனில் தொல்லைகொடுக்கும் அவர் மீது புகார் செய்யப்போகிறீர்களா? என்கிறார்கள். இப்போதைக்கு நான் அமைதியாக இருக்கிறேன். தொடர்ந்து இதேபோல் தொல்லை கொடுத்தால் போலீசில் புகார் தருவேன் என்றார்.

No comments:

Post a Comment