ராசியில்லா நடிகையாக முத்திரை குத்தாதீர்”சிரிப்பு போலீஸ்’ ஜனனி கெஞ்சல்
‘அவன் இவன்’ படத்தில், சிரிப்பு போலீசாக நடித்து, அனைவரையும் கவர்ந்தவர், ஜனனி அய்யர். ஆனால், அதற்கு பின், ஸ்ரீகாந்துடன், அவர் நடித்த, ‘பாகன்’ படம், சரியாக போகவில்லை. இதனால், ஜனனி மீது, ராசியில்லாத நடிகை என்ற முத்திரை, அழுத்தமாக பதிந்து விட்டது. இந்த முத்திரையை முறியடிக்க, அவர் மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. கோலிவுட் ஓரம் கட்டியதால், கோபித்துக் கொண்டு, கேரளா பக்கம், படையெடுத்தார். ஆனால், அங்கும், போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதனால், வெறுத்துப் போயிருந்த அவருக்கு, தற்போது ஆறுதலான செய்தி கிடைத்துள்ளது. பிரித்விராஜ் போலீஸ் அதிகாரியாக நடிக்கும், ‘செவன்த் டே’ படத்தில், ஜனனி தான், ஹீரோயின். இந்த படத்திலும், அவருக்கு போலீஸ் வேடம் தான். ஆனால், சிரிப்பு போலீசாக அல்லாமல், சீரியசான போலீசாக நடித்துள்ளாராம். ‘இந்த படத்துக்கு பின், மலையாளத்தில், நான் முன்னணி நடிகையாகி விடுவேன். தயவு செய்து, ராசியில்லாத நடிகை என்ற முத்திரையை என் மீது, குத்தாதீர்கள்’ என, தன்னை சந்திப்போரிடம், கெஞ்சலாக கேட்கிறார், ஜனனி.
No comments:
Post a Comment