Search This Blog

Wednesday, 18 December 2013

4 வருடத்துக்கு பிறகு திருமணம் செய்து கொள்வேன்: காஜல் அகர்வால்

4 வருடத்துக்கு பிறகு திருமணம் செய்து கொள்வேன்: காஜல் அகர்வால்

நான்கு வருடத்துக்கு பிறகே திருமணம் செய்து கொள்வேன் என்று காஜல் அகர்வால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழ், தெலுங்கில் காஜல் அகர்வால் பிசியாக இருக்கிறார். இந்த நிலையில் அவரது தங்கை நிஷா அகர்வாலுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. வருகிற 28–ந்தேதி திருமணம் நடக்கிறது.
அக்காவுக்கு முன்பே தங்கைக்கு திருமணமா? என்று விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. நிஷா அகர்வாலை தன்னைபோல் முன்னணி நடிகையாக்க காஜல் அகர்வால் திட்டமிட்டார். ஆனால் அது நடக்கவில்லை. நிஷா அகர்வாலை ஒப்பந்தம் செய்ய டைரக்டர்கள் தயங்கினர். அவர் வாழ்க்கை வீணாகி விடக்கூடாது என்ற நல்ல நோக்கத்தில் உடனடியாக திருமணத்தை முடித்துவிட காஜல் அகர்வால் ஏற்பாடு செய்தார்.
அவர் விருப்பப்படிதான் இந்த திருமணம் நடக்கிறது. காஜல் அகர்வாலுக்கும் உடனடியாக திருமணத்தை முடித்துவிட பெற்றோர் விரும்பினர். அதை அவர் ஏற்கவில்லை. இதுகுறித்து காஜல் அகர்வால் கூறும் போது,
சினிமாவில் நான் நல்ல நிலையில் இருக்கிறேன். கைவசம் நிறைய படங்கள் உள்ளன. நான்கு வருடங்களுக்கு பிறகே திருமணம் பற்றி சிந்திப்பேன் என்றார்.

No comments:

Post a Comment