செக்போஸ்ட்டை தாண்டமாட்டேன்! -லட்சுமிமேனன் பிடிவாதம்
கும்கி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி படங்களில் நடித்த பிறகு மஞ்சப்பை, சிப்பாய் படங்களில் மட்டுமே கமிட்டாகியிருந்தார் லட்சுமிமேனன். அந்த சமயத்தில் முன்னணி ஹீரோக்களின் படவாய்ப்புகள் கிடைப்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லாமல் இருந்ததால் மார்க்கெட்டை தக்க வைத்துக்கொள்வதற்காக மறற நடிகைகள் தொடையழகை காட்டி நடிக்கிறப்போ, நாம் முட்டியை காட்டியாவது நடிக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருந்தார்.
ஆனால், யாருமே எதிர்பாராத வகையில், சித்தார்த்தின் ஜிகர்தண்டா, விஷாலின் பாண்டியநாடு போன்ற படங்கள் அவருக்கு புக்காகின. கவர்ச்சியை நம்பாத, பர்பாமென்ஸை மட்டுமே நம்பக்கூடிய நடிகையாக தேடியவர்கள், அதற்கு லட்சுமிமேனன்தான் சரியான நடிகை என்று அவரை ஒப்பந்தம் செய்தனர். இதனால் கவர்ச்சிக்கதவை திறக்க நினைத்த நேரத்தில் இப்படியொரு ஜாக்பாட்டா என்று இன்ப அதிர்ச்சியடைந்த நடிகை, இனி இதுதான் எனது பாணி என்று பர்பாமென்ஸ் ஆர்ட்டிஸ்ட் என்ற முத்திரையை தன் மீது அழுத்தமாக பதித்துக்கொண்டுளளார்.
இந்த நேரத்தில், சமீபத்தில் ஒரு இயக்குனர், ஆக்சன் கதையொன்றில் நடிக்க வேண்டும் என்று லட்சுமிமேனனை அணுகினாராம். அவரிடத்தில் ஒரு மணி நேரம் அமர்ந்து மொத்தக்கதையையும கேட்ட நடிகை, கதையெல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா, இடைவேளைக்குப்பிறகு ரசிகர்களை ரிலாக்ஸ் பண்ண ஒரு சாங் இருக்கிறதா சொல்றீங்களே அதில்தான் விவகாரமே இருக்கு. இப்ப சுண்டு விரலைகூட காட்ட வேண்டாம் என்பீர்கள். ஸ்பாட்டுக்கு வரும்போது, இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என்று சொல்லி செக்போஸ்ட் தாண்ட வைத்து விடுவீர்கள். எத்தனை ஆக்சன் படத்துல இதை நான் பார்த்திருக்கேன் என்று நழுவி விட்டாராம் லட்சுமிமேனன்.
No comments:
Post a Comment