Search This Blog

Wednesday, 20 November 2013

டீன்ஏஜையே தாண்டாத ரம்யா நம்பீசன்!

டீன்ஏஜையே தாண்டாத ரம்யா நம்பீசன்!

ஆழமான கதை இருக்கிறதோ இல்லையோ நீளமான டைட்டில் இருந்தால் படங்கள் நீண்டநாள் ஓடிவிடும் என்றொரு செண்டிமென்ட் தற்போது கோடம்பாக்கத்தில் நிலவி வருகிறது. அதற்கு காரணம், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட சில படங்களின் வெற்றிதான் காரணம்.

அதனால் தற்போது நீளமான டைட்டீலுடன் பல படங்கள் வளர்ந்து வருகின்றன. இதில் ஒன்று, நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும். இந்த படத்தில் நாயகனாக நடிக்கயிருப்பவர் அருள்நிதி. முதன்முதலாக போலீசாக நடிக்கிறார். அதனால் அலட்டலான அட்டகாசமான போலீசாக ஆக்டு கொடுக்க தயாராகி வருகிறாராம் அவர்.

இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார் ரம்யா நம்பீசன். பீட்சாவுக்குப்பிறகு அப்பட நாயகன் விஜயசேதுபதிக்கு பெரிய திருப்பம் அமைந்தபோதும் ரம்யாவுக்கு எதிர்பார்த்தபடி படங்கள் இல்லை. அதனால் சில மலையாள படங்களில் நடித்து வந்தவர் இந்த படத்தை அதிக நம்பிக்கையுடன் ஏற்றுக்கொண்டுள்ளாராம்.

மேலும் மலையாளத்தில் சில இளவட்ட நடிகர்களின் படங்களில் நடிக்க அவர் முயற்சி எடுத்தபோது, உடல்கட்டை காரணம் காட்டி, அந்த நடிகருக்கு அக்கா மாதிரி தெரிகிறாய் என்று சில இயக்குனர்கள் ரம்யாவைப்பார்த்து கிண்டலடித்தார்களாம்.

அதன்காரணமாகவே, இப்போது அருள்நிதிக்கு ஜோடி என்றதும், சம்பந்தப்பட்டவர்கள் சொல்லாமலேயே தனது உடல்கட்டை ஜிம் சென்று கரைத்துக்கொண்டிருக்கிறார் ரம்யாநம்பீசன். அதோடு, இந்த பெண் ரொம்ப மெச்சூரிட்டியாக இருக்கும் போல் தெரிகிறதே என்று தன்னை ஏறஇறங்க பார்க்கும் சினிமாக்காரர்களிடம், நான் பாக்கத்தான் அப்படி இருப்பேன். ஆனா இன்னமும் நான் டீன்ஏஜையே தாண்டல என்று வாய்க்கூசாமல் சொல்கிறாராம் அம்மணி.

No comments:

Post a Comment