Search This Blog

Thursday, 28 November 2013

கவுதம் மேனன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக புதுமுகம் பல்லவி அறிமுகம்

கவுதம் மேனன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக புதுமுகம் பல்லவி அறிமுகம்

இயக்குனர் பாண்டிராஜ், இயக்குனர் கவுதம் மேனன் ஆகியோர் படங்களில் முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டு நடிகர் சிம்பு தற்போது ஓய்வில் இருக்கிறார். பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தில் நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில் கவுதம் மேனன் இயக்கும் படத்தில் சிம்புவுக்கு யார் ஜோடி என்பதில் பெரிய கேள்வி எழுந்தது. அவருடைய படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாயின. ஆனால், தற்போது இப்படத்தில் பல்லவி என்ற புதுமுகம் நடிக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
கவுதம் மேனன் படங்களில் மாயா, ஆராதனா, மேக்னா, ஜெஸ்ஸி, ரீனா, நித்யா ஆகிய பெயர்களை நாம் உச்சரிக்கும்போதே நம் நெஞ்சைத் தொட்டுச் செல்லும் கதாபாத்திரங்களின் பெயராகும். கவுதமின் இயக்கத்தில் உருவான இந்த உயிருள்ள கதாபாத்திரங்கள் கதாநாயகியின் பெயரையும், கௌரவத்தையும் உயர்த்தி செல்லும். அந்த வரிசையில் மற்றொரு காவியம் படைக்க, இன்னொரு உயிரோவியம் பாத்திரமாக உலா வர இருக்கிறது. இப்படத்தை கவுதம் மேனனே தயாரிக்கிறார்.

No comments:

Post a Comment