Search This Blog

Thursday, 28 November 2013

‘ஜில்லா’, ‘வீரம்’ ஒன்றாக வருவதால் விஜய், அஜீத் ரசிகர்கள் டுவிட்டரில் கடும் மோதல்

‘ஜில்லா’, ‘வீரம்’ ஒன்றாக வருவதால் விஜய், அஜீத் ரசிகர்கள் டுவிட்டரில் கடும் மோதல்

விஜய்யின் ‘ஜில்லா’ படமும், அஜீத்தின் ‘வீரம்’ படமும் பொங்கலையொட்டி ஜனவரி 10–ந்தேதி ஒன்றாக ரிலீஸ் ஆகின்றன. இதனால் இருவரின் ரசிகர்களுக்கும் டுவிட்டரில் கடும் மோதல் ஏற்பட்டு உள்ளது. ஒருவரையொருவர் தாக்கி கருத்துக்களை பதிவு செய்கின்றனர். கேலி சித்திரங்களையும் வெளியிடுகிறார்கள்.
டுவிட்டரில் இருக்கும் பிரபலங்கள் இந்த சண்டையை பார்த்து முகம் சுளிக்கிறார்கள். 1980 மற்றும் 90–களில் இதுபோல் முன்னணி கதாநாயகர்களுக்கு பலமான ரசிகர் பட்டாளம் இருந்தது. அப்போதெல்லாம் படங்கள் வெளியாகும்போது குறிப்பிட்ட நடிகரின் ரசிகர்கள் தியேட்டர்களில் கட்அவுட்’ பேனர்கள் வைப்பார்கள். பட்டாசு வெடித்தும் கொண்டாடுவார்கள்.
ஆனால் இப்போது அந்த கொண்டாட்டமும் மோதல்களும் சமூக வலைத்தளங்களுக்கு மாறியுள்ளது. பேஸ்புக், டுவிட்டரில் சண்டை போடுகிறார்கள். விஜய், அஜீத் ரசிகர்கள் ஒருவரையொருவர் தரக்குறைவான வார்த்தைகளால் தாக்கி டுவிட்டரில் சண்டையிடுகிறார்கள்.
இது விஜய், அஜீத், கவனத்துக்கு வந்ததா என்று தெரியவில்லை. ரசிகர்கள்தான் இப்படி மல்லு கட்டுகிறார்களே தவிர தனிப்பட்ட முறையில் விஜய்யும், ஆஜீத்தும் நெருங்கிய நண்பர்கள். ‘மங்காத்தா’, ‘வேலாயுதம்’ படங்களின் படப்பிடிப்புகள் ஒரே நேரத்தில் நடந்தபோது இரண்டு படக்குழுவினருக்கும் அஜீத் பிரியாணி தயார் செய்து பரிமாறினார்.
அப்போது அஜீத்துக்கு விஜய் விலை உயர்ந்த கைகடிகாரம் ஒன்றை பரிசாக வழங்கினார். ரசிகர்கள் இதை உணர்ந்து ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே இரு நடிகர்களின் எதிர்ப்பார்ப்பாக இருக்கும் என்றார் டுவிட்டர் சண்டையை பார்த்து வருத்தத்தில் இருக்கும் தயாரிப்பாளர் ஒருவர்.

No comments:

Post a Comment