Search This Blog

Friday, 15 November 2013

சமுத்திரக்கனியால் சாக்கடையில் விழுந்த ஜெயம் ரவி?

சமுத்திரக்கனியால் சாக்கடையில் விழுந்த ஜெயம் ரவி?

சமூகக்கோபம். இந்த ஒரு வார்த்தையை ஸ்கிரிப்டாக்கிதான் வடக்கே அமிதாப்பச்சன் முதல் தெற்கே ரஜினிகாந்த்வரை ஜெயித்தார்கள். சமூகச் சீரழிவுகள் இருக்கும்வரை கோபமும் இருக்கும் நிமிர்ந்து நில் போன்ற படங்களும் இருக்கும்.

படத்தின் ஒன் லைனைப் பார்த்தால் சரவணனின் இவன் வேற மாதிரியும், சமுத்திரக்கனியின் நிமிர்ந்து நில்லும் ஒன்று போலவே இருக்கிறது. எதுக்கு வம்பு என்று நாம் பார்க்காமல் போகிற விஷயங்களை ஒருவன் தட்டிக் கேட்கிறான். அதுதான் இவன் வேற மாதிரி. அதே அநியாயங்களை தட்டிக் கேட்கிறவன்தான் நிமிர்ந்து நில்லின் நாயகன்.

படத்தில் ஜெயம் ரவிக்கு இரு வேடங்கள். அதில் ஒன்று நடுத்தர வயது மனிதன். அவர்தான் வில்லன் என்று இதுவரை ஒரு கருத்து இருந்தது. ஆனால் சமுத்திரக்கனியின் பிரஸ்ரிலீஸ் அப்படியில்லை என்கிறது. ஒரு ஜெயம் ரவி நல்லவர் இன்னொருவர் ரொம்ப நல்லவர் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஒருகாட்சியில் சாக்கடையில் குதிக்கணும் என்று சொன்னதும் உடனே குதித்துவிட்டாராம் ஜெயம் ரவி.

லைட்டிங் செய்திருக்கிறார்களா? கேமரா ஓடுகிறதா என்று எதையும் பார்க்காமல் சாக்கடையில் குதித்தாரா? சும்மா காமெடி பண்ணாதீங்க பாஸ்.

No comments:

Post a Comment