பிரியாணி குடுத்து கரெக்ட் பண்ணும் ஹீரோ: கலக்கத்தில் புதுமுக நடிகைகள்!
பிரியாணி கொடுத்து புதுமுக நடிகைகளுடன் டீப்பாக பழகி வருகிறார் என்ற குற்றச்சாட்டு நடிகர் ஆர்யா மீது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
சீனியர் நடிகர் பார்த்திபனிலிருந்து காமெடி சூப்பர் ஸ்டார் என்று தன்னைத்தானே சொல்லிக்கொள்ளும் சந்தானம் வரை ஆர்யாவின் இந்த டெக்னிக்கைப் பார்த்து மிரண்டு போயிருக்கிறார்கள். மேடை கிடைத்தால் இந்த மேட்டரை பேசியே ஆர்யாவின் மார்க்கெட்டை காலி செய்யவும் அவர்கள் தயங்குவதில்லை.
அந்தளவுக்கு ஆம்பூர் பிரியாணியைப் போல கோடம்பாக்கத்தில் ஃபேமஸாகி விட்டது ஆர்யாவின் அண்ணாநகர் பிரியாணி.
தன் படங்களில் நடிக்கும் புதுமுக நடிகைகளை அண்ணாநகரிலுள்ள தன்னுடைய சொந்த ஹோட்டலுக்கு கூட்டிச் செல்லும் ஆர்யா அவர்களுக்கென்று ஸ்பெஷலாக தயார் செய்யும் பிரியாணியை கொடுத்தே அந்த நடிகைகளை கரெக்ட் செய்து விடுவார். இதுதான் ஆர்யா மீது மற்ற சினிமா பிரபலங்கள் வைக்கும் பொறாமைக் குற்றச்சாட்டு.
இதைப்பற்றி ஆர்யாவிடம் கேட்டால் இதெல்லாம், சும்மா பீதியை கெளப்பி விடுற வேலை பாஸ். பிரியாணி கொடுத்தெல்லாம், யாரையும் மடக்க முடியாது. ஃப்ரெண்ஷிப்ங்கிறது மத்தவங்க கிட்ட நாம் பழகுற விதத்தை பொறுத்து தான் இருக்கும்.
நாம், மற்றவர்களிடம் ஃப்ரெண்ட்ஷிப்போட பழகினால், மத்தவங்களும் நம்ம கூட நல்லா பழகுவாங்க. நானும் அப்படித்தான் புதுமுக நடிகைகள் யார் என்றாலும், ஈகோ பார்க்காமல், நானே, வலியச் சென்று, அவர்களிடம் பேசுவேன். எந்த நேரமும், ஜாலியாக பேசுவதால், அவர்களும், என்னுடன் ஜாலியாக பழகுகின்றனர். மற்றபடி, இதில், பெரிய வித்தை எதுவுமில்லை என்கிறார் ஆர்யா.
இருந்தாலும் ஆர்யாவைப் பார்த்தால் பத்தடி தூரம் தள்ளி நின்றே பேசுகிறார்களாம்.
No comments:
Post a Comment