Search This Blog

Wednesday, 27 November 2013

சிவாஜி சிலையை அகற்றும் முடிவிற்கு ஏன் உங்கள் குடும்பத்தில் யாரும் எதிர்க்கவில்லை – விக்ரம் பிரபு பதில்

சிவாஜி சிலையை அகற்றும் முடிவிற்கு ஏன் உங்கள் குடும்பத்தில் யாரும் எதிர்க்கவில்லை – விக்ரம் பிரபு பதில்

யு டி வீ மோஷன் பிக்சர்ஸ் மற்றும் திருப்பதி பிரதர்ஸ் இணைத்து தயாரித்த “இவன் வேற மாதிரி” படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

விழாவில் படத்தின் நாயகன் விக்ரம் பிரபு, நாயகி சுரபி, இயக்குனர் சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அனைவரும் படம் வளர்ந்த விதம் பற்றியும், அப்படத்தில் பணி புரிந்த அனுபவங்களை பற்றியும் பத்திரிகை நிருபர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.

கேள்வி நேரத்தின் போது ஒரு பத்திரிகை நிருபர் சிவாஜி சிலையை அகற்றும் தமிழக அரசின் முடிவிற்கு ஏன் உங்கள் குடும்பத்தில் இருந்து யாரும் எதிர்க்கவில்லை என்று கேட்டதிற்கு விக்ரம் பிரபு இக்கேள்வியை நீங்கள் எனது தந்தையிடமோ அல்லது எனது மாமாவிடமோ (ராம் குமார்) தான் கேட்கவேண்டும். இங்கு என்னுடைய படத்தை (இவன் வேற மாதிரி) பற்றி மட்டும் கேள்வி இருந்தால் கேளுங்கள் என்றார். உடனே உடனிருத்த திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ், சிவாஜி சிலையை அகற்றும் முடிவிற்கு சிவாஜி அவர்களின் குடும்பம் மட்டும் அல்ல, ஒவ்வொரு தமிழனும் இம்முடிவை எதிர் வேண்டும் என்றார்.

இவன் வேற மாதிரி படம் எந்த மாதிரியும் இல்லாமல் நல்ல மாதிரி இருந்தால் சந்தோசம் தான்.

No comments:

Post a Comment