Search This Blog

Wednesday, 30 October 2013

ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு கின்னஸ் சாதனை படைத்த படம்!!

ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு கின்னஸ் சாதனை படைத்த படம்!!

லாஸ்ட் பென்ஞ் பாய்ஸ் என்ற நிறுவனம் அகடம் என்ற படத்தை தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் என்ன சிறப்பு என்றால் படத்தை ஒரே ஷாட்டில் எடுத்திருக்கிறார்களாம். ஒரு வீட்டிற்குள் நடக்கும் திகில் கதையை அப்படியே கேமராவை ஆப் பண்ணாமல், கட் இல்லாமல், ரீடேக் இல்லாமல் அடுத்த காட்சி என்ன என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு தயாராக வைத்துக் கொண்டு பலமுறை ஒத்திகை பார்த்து பின்பு ஷூட் பண்ணியிருக்கிறார்கள். பாஸ்கர், சீனு அய்யர், தமிழ், கலைசேகரன் மற்றும் அனீஷா என்ற குழந்தை நட்சத்திரம் நடித்துள்ளனர்.

2மணி நேரம் 3நிமிடங்கள் ஓடும் இந்தப் படத்தை நவ்ஷாத் என்பவர் டைரக்ட் செய்திருக்கிறார். சென்சார் போர்ட் யூ/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளது. ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட முழுநீள சினிமா என்ற கின்னஸ் சான்றிதழையும் பெற்றுள்ளது. சமீபத்தில் படத்தை பார்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி படக்குழுவினரை பாராட்டி உள்ளார். வருகிற நவம்பர் 15ந் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment