அஜித்துக்கு ருட் போடும் நஸ்ரியா நசீம்
நேரம், ராஜா ராணி படங்களில் நடித்துள்ள நஸ்ரியா நசீமுக்கு சினிமாவில் இது பொற்காலம் என்றுதான் சொல்லவேண்டும். காரணம் அவர் தொட்டதெல்லாம் துலங்கிக்கொண்டிருக்கிறது. ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிக்கும் திருமணம் எனும் நிக்கா படத்தில் ஜெய்க்கு ஜோடியாகத்தான் தமிழில் முதல் படமாக ஒப்பந்தம் செய்யப்பட்டார் அவர். அதனால் கோடம்பாக்கத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாமல்தான் வந்தார்.
ஆனால், அவர் வந்த நேரம் ரொம்ப நல்ல நேரமாக இருந்ததால், அதன்பிறகு அவர் கமிட்டாகி நடித்த நேரம் படம் ஓடியதால் பல முன்னணி கம்பெனிகள் அவரை வளைத்து வளைத்து புக் பண்ணி விட்டன. அதிலும் நேரம் படத்தை விடவும் தற்போது வெளியாகியுள்ள ராஜாராணியில் நஸ்ரியாவின் நடிப்பு பேசப்படும் வகையில் இருப்பதால், கோலிவுட் இயக்குனர்களின் ஒட்டுமொத்த கவனமும் நஸ்ரியா மீதுதான் திரும்பியிருக்கிறது.
அதனால் காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் நஸ்ரியா, தனது கனவு நாயகன் அஜீத்துடனும் இந்த சூட்டோடு டூயட் பாடி விட வேண்டும் என்று அடிமனதில் அலைமோதிக்கொண்டிருந்த ஆசையை வெளியே எடுத்து வைத்து வருகிறார். அதற்கான முயற்சியில் இருப்பவர், அஜீத்துடன் டூயட் பாட வேண்டும் என்பதை வெளிப்படையாக சொல்லாமல், அவர் நடிக்கிற படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தாலும் அதை எனக்கு கிடைத்த பெரும் பாக்கியமாக கருதுவேன் என்றும் எக்கச்சக்கமாக பில்டப் கொடுத்து பேசி வருகிறார். இந்த தகவல்கூட தலயின் காதுகளுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment