Search This Blog

Saturday, 28 September 2013

காமெடியாக நடித்த யானை!

காமெடியாக நடித்த யானை!

இராம. நாராயணன் படத்திற்கு பிறகு யானை இப்போது ஒரு படத்தில் காமெடியாக நடித்திருக்கிறது. வி.டி.வி கணேஷ் தயாரித்து ஹீரோவாக நடிக்கும் படம் இங்க என்ன சொல்லுது, கணேசுக்கு ஜோடி மீரா ஜாஸ்மின் நடிக்கிறார். சந்தானம் காமெடியன். சிம்பு கெஸ்ட் ரோல் என பல சிறப்புகள் இந்தப் படத்துக்கு இருக்கு. இப்போது கூடுதலாக ஒரு யானையை காமெடியாக நடிக்க வைத்திருக்கிறார்கள்.

இப்போது அடிக்கடி காட்டு யானைகள் ரோட்டுக்கு வந்து நிற்கிறதல்லவா இதுதான் காமெடி கண்டன்ட். கேரளாவுக்கு செல்லும் கணேசையும், சந்தானத்தையும் ஒரு காட்டு யானை வழிமறிக்கிறது. அவர்களை படாதபாடு படுத்தி பின்பு நண்பனாகி அவர்களை அனுப்பி வைக்கிறதாம். இதற்காக தேவதாசன் என்ற யானையை திருச்சூரிலிருந்து அழைத்து வந்து 15 நாட்கள் நடிக்க வைத்திருக்கிறார்கள். நன்கு பழக்கப்படுத்தப்பட்ட அந்த யானை நிஜமாகவே சந்தானத்துக்கும், கணேசுக்கும் நண்பராகிவிட்டதாம். இந்த யானை எபிசோட் படத்தில் விழுந்து விழுந்து சிரிக்க வைக்குமாம்.

No comments:

Post a Comment