தெலுங்கில் டப் ஆகிறது ஹரிதாஸ்
ஆடிசம் பாதித்த சிறுவனை அவனது போலீஸ் தந்தை எப்படி வளர்க்கிறார் என்பதை பற்றிய கதையாக ஹரிதாஸ் வெளிவந்தது. கிஷோர் தந்தையாகவும், மாஸ்டர் பிரதீப் ராவத் ஆடிசம் பாதித்த சிறுவனாகவும், சினேகா டீச்சராகவும் நடித்திருந்தார்கள். ஜி.என்ஆர்.குமரவேலன் டைரக்ட் செய்திருந்தார். டாக்டர் ராம் தயாரித்திருந்தார்.
இப்போது இந்தப் படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு ரிலீசாக இருக்கிறது. படத்திற்கு மா நன்ன போலீஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தயாரிப்பாளர் டாக்டர் ராம் கூறும்போது ஹரிதாசை தெலுங்கில் ரீமேக் செய்யும் திட்டத்தில் இருந்தோம். அதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை. அதனால் டப் செய்ய தீர்மானித்து அதற்கான பணிகள் முடிந்திருக்கிறது. ஹரிதாஸ் படத்தின் கதை சர்வதேசத்துக்கும் பொருந்தும். அதனால் தெலுங்கிலும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நம்புகிறேன் என்றார்.
No comments:
Post a Comment