Search This Blog

Saturday, 7 September 2013

காஜலுக்கு திருமண ஏற்பாடு நடக்கவில்லையாம்!

காஜலுக்கு திருமண ஏற்பாடு நடக்கவில்லையாம்!

துப்பாக்கி படத்தையடுத்து, மீண்டும் விஜய்யுடன் ஜில்லா, கார்த்தியுடன் ஆல் இல் ஆல் அழகுராஜா படங்களில் நடித்து வருகிறார் காஜல்அகர்வால். இந்த நிலையில், தமிழ் மட்டுமின்றி, தெலுங்கிலும் சில படங்கள் அவர் கமிட்டாக இருந்தன. ஆனால், கோடிக்கணக்கில் சம்பளம் கேட்டு ஷாக் கொடுத்ததால், அந்த படங்கள் வேறு நடிகைகளுக்கு தாவி விட்டன.

இந்த நிலையில், காஜல் இப்படி படங்களை தவிர்ப்பதற்கு காரணம், அவர் விரைவில் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதுதான் என்று வேகமாக செய்தி பரவி வருகிறது.

ஆனால், இதுகுறித்து காஜல்அகர்வால் கூறுகையில், திருமணம் பற்றி இன்னும் நான் யோசிக்கவே இல்லை. எனக்கு 30 வயது ஆகிவிட்டபோதும், கல்யாண வயதாகிவிட்டதாக நான் பீல் பண்ணவும் இல்லை. இன்னும் சினிமாவில் பல வருடங்களுக்கு கலைச்சேவை ஆற்ற வேண்டும் என்பதே எனது விருப்பமாக உள்ளது.

மேலும், சில படங்களுக்கு அதிக சம்பளம் கேட்டதால் என்னை அப்படங்களில் இருந்து நீக்கி விட்டதாக தற்போது என்னைப்பற்றி செய்தி பரவி வருகிறது. ஆனால் அந்த படங்களில் நான் நடிக்காததற்கு காரணம் சம்பளம் அல்ல, அவர்கள் கேட்ட தேதியில் ஜில்லா படத்திற்கு கால்சீட் கொடுத்திருந்தேன் அதனால்தான் ஏற்க முடியாத நிலை ஏற்பட்டது. மற்றபடி வேறு எந்த காரணமும் அல்ல.

மேலும், தற்போது நடித்து வரும் படங்களைத் தொடர்ந்து பாலிவுட்டிலும் கவனம் செலுத்தப்போவதாக கூறியுள்ள காஜல், அக்ஷய்குமாருடன் ஒரு படத்தில் நடிப்பதற்காக பேசிக்கொண்டிருப்பதாகவும் சொல்கிறார்.

No comments:

Post a Comment