Search This Blog

Monday, 9 September 2013

மலையாளத்தில் ரீமேக் ஆகும் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’

மலையாளத்தில் ரீமேக் ஆகும் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’

கடந்த 2012-ஆம் ஆண்டு விஜய் சேதுபதி, காயத்ரி நடிப்பில் வெளிவந்த படம் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’. இந்த படத்தை குறும்பட இயக்குனர் பாலாஜி இயக்கியிருந்தார். வித்தியாசமான கதையம்சத்தில் வெளிவந்த இப்படம் ரசிகர்களிடையே பெறும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இந்த படத்தை மலையாளத்தில் ரீமேக் செய்யவிருக்கின்றனர். இப்படத்தின் கதாநாயகனாக ‘நேரம்’ படத்தில் நடித்த நிவின் பவுலி நடிக்கிறார். நடிகை அம்பிகாவின் தம்பி சுரேஷ் இப்படத்தை இயக்குகிறார்.
தமிழில் மிகப்பெரிய பிரம்மாண்டமான படங்களை வெளியிட்ட வேந்தர் மூவீஸ் நிறுவனம் புதிதாக தொடங்கியிருக்கும் ‘மாருதி கிரியேஷன்ஸ்’ நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகையர் தேர்வு விரைவில் தொடங்கவிருக்கிறது. இப்படம் குறித்து மேலும் பல தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment