சின்னத்திரையில் அப்பாஸ்...!!
காதல் தேசம் படத்தின் மூலம் 1996ம் ஆண்டு அறிமுகமானவர் நடிகர் அப்பாஸ். வி.ஜ.பி, படையப்பா, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், மின்னலே, ஆனந்தம், திருட்டு பயலே உள்பட பல படங்களில் நடித்தார். என்றாலும் அப்பாஸ் ஹீரோவாக வெற்றி பெற வில்லை. மார்க்கெட் போனபிறகு வெளிநாட்டில் கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் ஈவண்ட் மேனேஜ்மெண்ட் நடத்தினார். சில விளம்பர படங்களில் நடித்தார். தற்போது டி.வி.சீரியலில் நடிக்க வந்து விட்டார். தற்போது வைதேகி எனும் டி.வி. சீரியலில் நடித்து வருகிறார். குழந்தை இல்லாத தம்பதிகளின் மனப் போராட்டத்தை சொல்லும் தொடர். சாதக பறவைகள் சங்கர், அவரது நண்பர் பரணி ஆகியோர் இதனை தயாரிக்கிறார்கள்.
No comments:
Post a Comment