Search This Blog

Tuesday, 3 September 2013

புதைகுழிக்குள் விழுந்த ஹீரோ ஹீரோயின்!!

புதைகுழிக்குள் விழுந்த ஹீரோ ஹீரோயின்!!

கோவையைச் சேர்ந்த ரேஸ்கோர்ஸ் ரகுநாத் என்பவர் அவரே தயாரிச்சு டைரக்ட் செய்யுற படம் சிறுவாணி. கோவையை சுற்றி டாக்கி போர்ஷன் எடுத்தார்கள். அந்தமான் தீவில் பாடல் காட்சிகளை எடுத்தார்கள். ஹீரோவாக சஞ்சய்யும், ஹீரோயினாக ஐஸ்வர்யாவும் நடித்திருக்கிறார்கள். படத்தின் ஷூட்டிங் அத்தனையும் முடிந்து விட்டது. என்றாலும் பேஜ் ஒர்க்காக சில காட்சிகள் எடுக்க வேண்டியது இருந்ததாம். இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவையை அடுத்த சிறுவாணி காட்டுப்பகுதியல் ஹீரோவும் ஹீரோயினும் மலைக்குள் தனியாக நடந்த வருவது போன்ற சீனை எடுத்தார்கள். தூரத்தில் நின்று கொண்டு அதை படம்பிடித்திருக்கிறார்கள். அப்போது நடந்து வந்து கொண்டிருந்த ஹீரோவும், ஹீரோயினும் நடந்து வந்த பாதையில் இருந்த ஒரு புதைகுழிக்குள் விழுந்து விட்டனர். இதை பார்த்த படக்குழுவினரும், வேடிக்கை பார்த்த மக்களும் அதிர்ச்சி அடைந்து ஓடி வந்து ஹீரோ ஹீரோயின்களை காப்பாற்றி இருக்கிறார்கள்.

பார்ப்பதற்கு சமதளம் போல இருந்தது. அதற்குமேல் நடந்து ரிகல்சல் நடத்தினோம் அப்போதெல்லாம் எதுவும் நடக்கவில்லை. டேக் போகும்போதுதான் உள்ளே விழுந்தோம் அடிக்கடி நடந்ததால் புதைகுழியின் மேல்பகுதி பலவீனமாகி விரிந்துவிட்டதாக உள்ளுர் மக்கள் சொன்னார்கள். எங்கள் இருவருக்குமே நீச்சல் தெரியும். இருந்தாலும் புதைகுளிக்குள் நீச்சல் வேலைக்கு ஆகாது என்பது புரிந்தது. இருவருமே மரணத்தை தொட்டுவிட்டு திரும்பியிருக்கோம் என்கிறார் ஹீரோ சஞ்சய் மற்றும் ஹீரோயின் ஐஸ்வர்யா.

No comments:

Post a Comment