உலகத்தையே திரும்பி பார்க்க வைக்குற படம் இயக்குகிறேன்: மனோஜ்குமார் பெருமிதம்
பாரதிராஜாவின் மச்சான் மனோஜ்குமார், மண்ணுக்குள் வைரம் என்கிற படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகமானார். இதுவரைக்கும் 20க்கும் மேற்பட்ட படங்களை டைரக்ட் பண்ணியும் மண்ணுக்குள் வைரம் தவிர வேறு எந்தப் படமும் பெருசாக அமையவில்லை. இப்போது மண்ணுக்குள் வைரம் படத்தை தயாரிச்ச மதர்லேண்ட் பிக்சர்சின் கோவைத்தம்பியே மீண்டும் தயாரிக்க உயிருக்கு உயிராக என்ற படத்தை டைரக்ட் செய்து வருகிறார் மனோஜ்குமார். சஞ்சீவ், நந்தனா, சரவணகுமார் ப்ரீத்திதாஸ் நடிக்கிறார்கள். சாந்தகுமார் என்ற இசை அமைப்பாளரும், ஆனந்தகுமார் என்ற ஒளிப்பதிவாளரும் அறிமுகமாகுறாங்க. இந்த படம் பற்றி மனோஜ்குமார் மீடியாக்களிடம் பெருமையாக கூறியது வருமாறு:
மூணு வருஷ கேப்புக்கு பிறகு இந்தப் படத்தை டைரக்ட் பண்றேன். இன்னிக்கு இளைஞர்கள் புதுசு புதுசா சிந்திச்சு படம் எடுக்கிறாங்க. அவிங்களுக்கு சவால்விடுற மாதிரி நானும் யூத்தா எடுத்திருக்கிற படம். கல்லூரி மாணவர்கள் உலகத்தையே புரட்டி போடுற கதை. படத்தோட கிளைமாக்சை உலகமே திரும்பி பார்க்கும், விவாதிக்கும். நீங்களும் படத்தை பார்த்துட்டு உங்களுக்கு என்ன வயசுன்னு என்னைய கேட்பீங்க. அத்தனை யங்கா படத்தை டைரக்ட் பண்ணியிருக்கேன். என்றார்.
No comments:
Post a Comment