கமலின் அடுத்த படம் மூ...?
விஸ்வரூபம்-2 படத்தின் இறுதிகட்டத்தை நெருங்கி விட்டார் கமல். தீபாவளி அல்லது இந்த ஆண்டிலேயே படம் திரைக்கு வந்து விடும் என்கிறது அப்பட வட்டாரம். அதனால் அடுத்து கமல் இயக்கப்போகும் படம் குறித்த விசயங்களும் மூவ்மெண்டாகியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பே லிங்குசாமி தயாரிக்கும் படத்தில் நடிகர் ரமேஷ்அரவிந்த் இயக்கத்தில் ஒரு காமெடி படத்தில் கமல் நடிப்பதாக கூறப்பட்டது. அதற்கு பெயர்கூட உத்தமவில்லன் என்று செய்திகள் வெளியாகின. ஆனால், இப்போது அந்த செய்தியில் ஒரு திருத்தம் செய்திருக்கிறார்களாம்.
அதாவது, அப்படத்தை கமலையே இயக்கி நடிக்குமாறு தயாரிப்புதரப்பு கேட்டுக்கொண்டுள்ளதாம். அதற்கு சம்மதம் சொல்லிவிட்ட கமல், தன்னுடன் தென்னிந்திய அளவில் புகழ்பெற்ற மேலும் சில நடிகர்களையும் கூட்டணி அமைத்துக்கொண்டு அப்படத்தில் இறங்குகிறாராம்.
மேலும், விஸ்வரூபம்-2 படத்தின் ரிலீசுக்குப்பிறகு தொடங்கயிருக்கும் அப்படத்திற்கு மூ என்று ஒற்றை எழுத்தில் பெயர் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என்கிறார்கள்.
No comments:
Post a Comment