புதுச்சேரி திரைப்பட விழாவில் இயக்குனர் சற்குணத்திற்கு ரூ.1 லட்சம் பரிசு
இந்திய பனோரமா 2013 திரைப்பட 30 ம் ஆண்டுவிழா புதுச்சேரியில் இன்று துவங்கியது. 5 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் துவக்க நாளில் கலந்து கொண்ட புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, தமிழ் திரைப்பட இயக்குனர் ஏ.சற்குணத்தை வெகுவாக பாராட்டினார். விழாவில் ரங்கசாமி பேசுகையில், சமூக நிலையை விளக்கும் கருத்தாழம் மிக்க தரமான படங்களை இயக்குனர்கள் தயாரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். பின்னர் வாகை சூட வா படத்தின் இயக்குனர் சற்குணத்தை வெகுவாக பாராட்டியதுடன், அவருக்கு ரூ.1 லட்சம் பரிசும் வழங்கினார். தனக்கு கிடைத்த இந்த பரிசுத்தொகையை, தமிழ் திரைக்கதை எழுத்தாளர் சங்கரதாஸ் சுவாமிகள் அறக்கட்டளைக்கு சற்குணம் வழங்கினார். பனோரமா விழாவில் தமிழ், மலையாளம், பெங்காலி, இந்தி உள்ளிட்ட இந்திய மொழி படங்கள் திரையிடப்பட உள்ளன. புதுச்சேரி தகவல் இயக்குனரக கழகம், டில்லி தேசிய திரைப்பட இயக்குனரகத்துடன் சேர்ந்து இந்த விழாவை நடத்துகிறது.
No comments:
Post a Comment